எதிர்வரும் 19.10.2019 சனிக்கிழமை மாலை 17.00 மணிமுதல் ஆலய மண்டபத்தில் வாணிவிழா இடம்பெறும்...

கோவிலை பற்றி


உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எமது சமுதாய மக்கள் நலன் கருதி இந்து கலை, கலாச்சார, சமய சம்பிரதாய விழுமியங்களை பேணிக்காக்கும் வகையிலும் இறைநம்பிக்கை , வழிபாட்டுடன் ஆன்மீக நுன்அறிவினை பெற்று வாழ்வில் அனைத்து இந்துமக்களும் சிறந்து விழங்குவதற்காகவும் பொது நலனாக கருதி ஜேர்மனி பிராங்பேர்ட் நகரில் கடந்த 2000 ஆண்டின் “இந்துமன்ற “ தலைவராக விளங்கிய திரு . சு. மகேந்திரனின் நிருவாகத்தினாலும் அம்பிகை அடியவர்களின் பூரண ஒத்துழைப்புடனும் , ஆலயகுருக்களாக சிவஶ்ரீ. ஸோம. துளஸிகாந்தக்குருக்களை அமர்த்தி ஆரம்பிக்கப்பட்ட “அன்னை ஶ்ரீ நாகபூசணி அம்பிகை தாயின் ஆலயத்தை “ பரிபாலிக்கும் பாக்கியம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனும் போது நாமும் எம்பெருமாட்டியின் கருனைக்கு ஆளாகியுள்ளோம் என எண்ணி அகமகழ்கின்றோம்; அது எமது மகிழ்ச்சியின் உச்சகட்டமே எனலாம். அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்தும் எம்முடன் சேர்ந்து ஒத்துளைப்பினை நல்கிவரும் ஆலய நிருவாகத்தினருக்கும், குருக்கள் ஐயா அவர்கட்கும், ஆலயவளர்ச்சிக்கு ஆணிவேராக இருக்கும் மாதாந்த சந்தா தாரராக அங்கத்தவர் பணம் கட்டுபவர்களுக்கும் பல விஷேட தினங்களையும், பண்டிகைகளையும் மற்றும் விழாக்காலங்களையும் பொறுப்பேற்று முன்னின்று ஒத்துழைப்பு நல்கும் உபயதாரர்களுக்கும் அனைத்து அடியவர்களுக்கும் குறிப்பாக தொண்டாற்றிவருபவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிப்பதுடன் அன்னை ஶ்ரீ நாகபூசணி தாயின் அருள் கிடைக்க பிரார்தித்து அமைகின்றோம். சுபமங்களம்

  -இங்ஙனம் ஆலய நிருவாகம் இந்துமன்றம் தலைவர் அன்பன் கிருஷ்ணதாஸ். (தம்பி)

Administration


Sri Nagapooshani Temple was started by Mr.Mahendran, the President of Inthumantram.

At present, the temple is being taken care by Mr. M. Dharmagulsingam (Guna),

Mr. Krishnadas (Thambi),

Mr. Naguleshwaran (Rajan),

Mr. K. Mahendran (Chinnavar),

Mr. Paramanandam (Ananthan),

Mr. Kandasamy and

Mrs. Mahendran (Vijaya).

Structure

திருக்கோயிலின் நுழைவு வாயில் வடதிசையை நோக்கி அமைந்துள்ளது. வாயிலின் வலது புறம் அன்னை ஶ்ரீ நாகபூசணி அம்மனுக்கு நிவேதனம் செய்யும் திருவருட்பிரசாதங்களும், அன்னதானம் கொடுப்பதற்காக சமையல் கூடமும், கை கால் சுத்தம் செய்யும் வசதிகளுண்டு. இடதுபுறம் பாதணிகளும். மேலங்கிகளும் வைக்கும் வசதியுள்ளது.ஆலய நுளைவாசலுக்கு முன்பாகவே அமைத்துள்ள வீதிகளிலோ அல்லது புகையிரத நிலையத்தின் அருகிலோ தங்களது வாகனங்களை நிறுத்தி வைக்கலாம்.

ஆலயதினுள் முன்பகுதியில் பூஜைகளுக்குரிய பொருட்கள் அர்சனை பற்றுசீட்டுக்கள் , நன்கொடைகள் கொடுக்கும் காரியாலயமும் திருமணம், மற்றும் அம்பிகை அடியவர்களுக்குரிய அன்னதான ஏற்பாட்டு மண்டபம் அமைந்துள்ளது.

மேலும் உள்ளே நுழைந்ததும் கிழக்கு நோக்கி வினாயகர், கர்ப்பகிரகத்தினுள் நாகம் குடைபிடிக்க அன்னை ஶ்ரீ நாகபூசணியுடன்             ஶ்ரீ சக்கரமும் ,  பரிவார   தெய்வங்களாக   வள்ளி தேவசேனாதிபதியுடன்   சுப்பிரணியர் சுவாமியும், வயிரவர் சுவாமியும்  அத்துடன்   ஶ்ரீ தக்ஷ்சணாமூர்த்தி, சிவலிங்கம், லக்ஷ்மிதாயார், ஞானசரஸ்வதி தேவி, ஐயப்பன் சுவாமி, பூலக்ஷ்மி-மஹாலக்ஷ்மியுடன் வெங்கடேஸ்வர பெருமான், ஶ்ரீ துர்க்கை அம்மன், சிவகாமி சுந்தரியுடன் கூடிய நடராஜப்பெருமானும், நால்வரும், நவக்கிரக நாயகர்கள். சர்ப்பதோஷ பரிகார நாகப்பிரதிஷ்டடை மூர்த்தங்களும், தாரிகா சண்டேஸ்வரியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

திருக்கோவிலின் பிரதான நுழைவு வாயில் வடதிசையை நோக்கி அமைந்துள்ளது. வாயிலின் வலது புறத்தில் அன்னை ஶ்ரீ நாகபூசணி அம்மனுக்குரிய திருவருட் பிரசாதங்களான நிவேதனங்களும், அன்னதானத்துக்குரிய சமையல் கூடமும் கை, கால் சுத்தம் செய்யும் வசதிகளுமுண்டு. வாயிலின் இடது புறத்தில் பாதணிகளும், மேலங்கிகள், குடை, தொப்பி மற்றும் குழந்தைகளை இருத்தி உருட்டி வரும் வாகனத்தையும் பத்திரப்படுத்தி வைக்கும் வசதிகளும் உள்ளது. குறிப்பாக ஆலயத்துக்கு காரில் வரும் அடியார்கள் பிரதான வீதிகளின் பக்கத்திலோ அல்லது புகையிரத நிலையத்தின் அருகிலோ தங்களது வாகனங்களை நிறுத்தி வைக்கலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.

தலப்பெருமை


ஈழத்தின் வடபால் அமைந்துள்ள புராண சேத்திரமாகவும் சக்திபீடங்களின் “புவனேஸ்வரி பீடமாக” சிறந்து விளங்கிடும் நையினை தீவில் சுயம்பாக தோன்றி காட்சிகொடுக்கும் அன்னை ஶ்ரீ நாகபூசணி தாயை மனதில் நிலை நிறுத்தி ஜேர்மனி பிராங்பேர்ட் நகரில் அடியவர்கள் நலன்கருதி வழிபடுவதற்க்காக உருவாக்கிய ஆலயமாகும். இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாக அனைத்து தெய்வங்களுக்கும் சன்னதிகள் உண்டு. அத்துடன் அனைத்து கலை, கலாச்சார, விஷேட விரத, பண்டிகைகள் மற்றும் அபிஷேகங்களும் - பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நாம் முன்னெடுக்கும் அனைத்து கைங்கர்யங்களும் தடைப்படாது சிறந்து அமைய விஷேட வழிபாடுகள் பல உள்ளன. இதனால் பல அடியவர்கள் பயன்பெறுகின்றனர். விஷேடமாக திருமணத் தடை உள்ளவர்கள், நாகதோஷ , காலசர்ப்பதோஷ , களத்திரதோஷ, புத்திர சோக பரிகார நிவர்த்தி போன்ற வழிபாட்டுகள் நடைபெற்றுவருகின்றன. இவ்வாறு ராகு, கேது தோஷ பரிகாரங்கள் சிறப்புற நடைபெறுவதால் பக்தர்களின் அடி மனதில் அன்னை ஶ்ரீ நாகபூசணி அம்மன் வீற்றிருந்து கருனை மழை பொழிகின்றாள் எனலாம். ஜேர்மன் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு ஆண்டும் வருடாந்த மஹோத்சவம் (பிரம்மோற்சவம்) 15 நாட்கள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தேரில் (இரதம்) அன்னை ஶ்ரீ நாகபூசணி அம்மன் அமர்ந்து நகர் பவனியாக வீதியுலாவாக வருவதால் 3000 அடியவர்களுக்கு மேல் தரிசனம் பெறுகின்றனர் எனலாம்.

ஆலயம் திறந்திருக்கும் நேரமும் பூஜை நேரமும் / Daily Opening Schedule


ஞாயிறு / Sun திங்கள் / Mon செவ்வாய் / Tue புதன் / Wed வியாழன் / Thu வெள்ளி / Fri சனி / Sat
ஆலயம் திறந்திருக்கும் நேரம் / Opening Time 18.30 - 20.00 மணி 18.30 - 20.00 மணி 18.30 - 20.30 மணி 18.30 - 20.00 மணி 18.30 - 20.00 மணி 18.30 - 20.30 மணி 18.30 - 20.00 மணி
குளிர்காலம் / Winter
  பூஜை நேரம் / Aarathi 19.00 19.00 19.00 19.00 19.00 19.00 19.00
கோடைகாலம் / Summer
  பூஜை நேரம் / Aarathi 19.00 19.00 19.30 19.00 19.00 19.30 19.00
  விஷேட தினங்கள் / Spl Day 19.30 19.30 19.30 19.30 19.30 19.30 19.30

Events

January

February

March

April


May

June

July

August


September

October

November

December

Transport


Frankfurt Hauptbahnhof ல் இருந்து S-Bahn இல் ஆலயம் வந்தடைய ஏறவேண்டிய இலக்கங்கள். S3, S4, S5 இறங்கவேண்டிய இடம் Westbahnhofs

மேலும் Messe, Kronenberg, Bad soden, Friedrichsdorf நோக்கி செல்லும் அனைத்து வண்டியிலும் வந்தடையலாம்.

Straßenbahn Line 17 ல் Rebstockbad நோக்கி பயணிக்கையில் இறங்கவேண்டிய இடம் Nauheimer Stress

மேலும் Strassenbahn Line 16 ல் Ginnheim ஐ நோக்கி பயணிக்கையில் இறங்கவேண்டிய இடம் Adalbert/Schlosstrasse

Upayam


உபயம், நன்கொடை, பூஜை தொடர்புகளுக்கு

ஆலய தொலைபேசி இலக்கம் : 069.97945618

நிருவாகம் ;- திரு. கிருஷ்ணதாஸ் இலக்கம் : 01729748177

ஆலய குருக்கள் இலக்கம் : 01707737697 (மேலதிக விஷேட பூஜை விபரங்களுக்கு)

Special Pooja

(ஆலய நாள் காட்டியின் மூலம் விஷேட தினங்களை அறியலாம்).

  • அம்பிகைக்கு அபிஷேகம்- பூஜை
  • சங்காபிஷேகம், விஷேட ஹோமம் , சாந்தி ஆகியவை..
  • கால சர்ப்ப . நாக தோஷ பரிகார பூஜைகள்
  • பிள்ளை விற்று வாங்கல்
  • சோறு தீத்தல், காது குத்தல் ஏடு தொடக்கல் போன்றவைகள்
  • புடவை சாற்றல்
  • கார்- வாகன பூஜை செய்தல்
  • அன்னதான உபயம் செய்தல்

மேலும் விஷேடமாக

  • திருமணம் ( அனைத்து ஒழுங்குகளும், தகவல்களும் செய்து தரப்படும்)
  • ஸீமந்தம் வளைகாப்பு, ஆயுஷ்யஹோமம், ஜாதகரீதியில் பொருத்தம், நவக்கிரக தோஷ பரிகார ஹோமம் போன்ற விவரங்களை ஆலயகுருக்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

Let's Get In Touch!